×

மாணவர்களுக்கு இயற்பியல் பயிற்சி

உடுமலை, பிப்.21: ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் சோதனைகளின் மூலமாக இயற்பியல் கருத்துக்களை கற்றல் என்ற ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் கல்லூரி முதல்வர் கலைசெல்வி, இணை பேராசிரியை நிர்மலா, சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் விஜயன், ஹரீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் டாப்ளர் விளைவு, புவிஈர்ப்பு விசை, எலக்ட்ரோ மேக்னடிக் போன்றவை குறித்து விளக்கம் தரப்பட்டது. இதில் கிருஷ்ணம்மாள் கல்லூரி, கமலம் கல்லூரி, எஸ்.டி.சி, ஜி.வி.ஜி, வித்யாசாகர், பழனி அரசு கல்லூரி, உடுமலை அரசு கல்லூரி மாணவ மாணவிகள், வித்ய நேத்ரா பள்ளி, ஆர்.கே.ஆர் பள்ளி, சாந்தி, வி.ஏ.வி, எஸ்.வி.ஜி, சீனிவாசா, எஸ்.கே.பி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 10-ம் வகுப்பு மாணவர்கள் யூடியூப்,...