×

கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியம்

ஊட்டி, பிப். 21: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில்,  புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்கள் குறித்து தேசிய அளவிலான  விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. பேராசிரியை பிரவீனாதேவி வரவேற்றார். கல்லூரி முதல் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராம தொழில்கள் துணை உதவி இயக்குநர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை பிரிவுக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விருப்பம் உள்ள தொழில் முனைவோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.விண்ணப்பதாரர் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஒரு பக்கத்திற்கான திட்ட அறிக்கையை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள தேர்வுக்கழு மூலம் தியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை கடன் தொகையை வங்கி அனுமதித்து வழங்கும்.

கிராமப்புறங்களில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். பிஎம்இஜிபி, முத்ரா யேஜானா மற்றும் வாரிய திட்டங்களில் தொழில்களை துவங்கி தொழில் முனைவோர்களாக மாறி, பலருக்கும் வேலை வாய்ப்புக்களை
அளிக்கலாம். மத்திய அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு கல்லூரி மாணவர்களும் திட்ட அறிக்கையை தயார் செய்து கடன் பெற்று தொழில்களை தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையலாம், என்றார். தொடர்ந்து கதர் மற்றும் கயிறு வாரிய திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில், விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர் எபினேசர், வணிகவியல் துறை தலைவர் கண்ணபிரான், பொள்ளாச்சி கயிறு வாரிய அலுவலர் பூபாலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : businesses ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...