சிவன் கோயில்களில் இன்று மகாசிவராத்திரி

கோவை, பிப். 21: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடக்கிறது. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் மகாசிவராத்திரி பூஜைகள் துவங்குகிறது. இதில், இரவு 9 மணிக்கு முதற்கால அபிஷேக ஆராதனையும், இரவு 11 மணிக்கு 2ம் கால அபிஷேக ஆராதனையும், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், காலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேக பூஜையும் நடக்கிறது. இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலை 108 முறை வலம் வரும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதே போல், கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் மாலை 4 மணிக்கு முதற்கால அபிஷேக பூஜையும், இரவு 9 மணிக்கு 2ம் கால பூஜையும், 22ம் தேதி அதிகாலை 1 மணிக்கு 3ம் காலபூஜையும், காலை 5 மணிக்கு 4ம் கால அபிஷேக மகா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.

Advertising
Advertising

மேலும், உப்பார வீதி பேட்டை ஈஸ்வரன் கோயிலிலும் நான்கு கால பூஜை நடக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்பட அனைத்து சிவன் கோயில்களிலும் விடியவிடிய பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மேலும், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோயில், வெள்ளலூர் தேனீஸ்வரர் கோயில், நல்லாம்பாளையம் ஞானமூர்த்தீஸ்வரர் கோயில், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: