பொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப்.21: பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திட்ட அலுவலர்கள் கூறுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு, கடந்தாண்டில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினரும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுகின்றனர். எத்தகைய வகுப்பை சேர்ந்த மக்களாக இருந்தாலும் ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு அதிகமான விளைநிலம் இருக்கக்கூடாது என, மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. முற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர், ஜெயின் சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வகுப்பினர் என சான்றிதழ்களை இனி ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்,’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: