வியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை

கோவை, பிப்.21: கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஊமைப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (47). கூலித்தொழிலாளி. இவருடைய முதல்  மனைவி  சங்கரம்மாள்(35). இந்நிலையில் கடந்த  15 வருடங்களுக்கு  முன்பு  அதே  ஊரை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை துரைசாமி 2வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 17ம் தேதி குடும்ப தகராறு காரணமாக சரஸ்வதி தூக்கிட்டு  தற்கொலை  செய்து கொண்டார். மனைவி இறந்த  துக்கம் தாளாமல் மனவேதனையில் இருந்து வந்த துரைசாமி நேற்றுமுன் தினம் அங்குள்ள முனியப்பன் கோயில் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு  தற்கொலை  செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். கோவை அடுத்த விளாங்குறிச்சி லெனின் வீதியை சேர்ந்தவர் வீரப்பன் (29). பேன்சி ஸ்டோர், பாத்திரக்கடை வைத்திருந்தார். தொழில் அபிவிருத்திக்காக வீரப்பன் பல பேரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த வீரப்பன் சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.   கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: