×

மாணவரின் உடல் உறுப்பு தானம்

கோவை, பிப்.21: கோவை சவுரிபாளையம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன், மகாலட்சுமி ஆகியோரின் மகன் தனுஹாஸ் (18). இவர் கடந்த 17ம் தேதி ரோடு விபத்தில் காயமடைந்தார். அவினாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தனுஹாசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியின் பேரில் நுரையீரல், இருதய வால்வு, கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகம் கே.எம்.சி.எச்சுக்கும், இதர உடல் உறுப்புகள் சென்னை, மதுரை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மெடிக்கல் சென்டர் தலைவர் நல்ல பழனிச்சாமி கூறுகையில், ‘‘ மக்களிடையே உடல் உறுப்பு தானம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பின் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரை உயிரை காப்பாற்றும், ’’ என்றார்.

Tags :
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...