ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பாதுப்புத்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி

கோவை, பிப். 21: கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் கற்றல் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் ‘’இந்திய பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகள்” என்னும் நிகழ்ச்சி  நடந்தது. கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிரிகேடியர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக   கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ‘’கடற்படை, ராணுவம், விமானப்படையில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த துறைகளில் மாணவர்கள் இணைந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கர்னல்கள் மோகன்தாஸ், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், ஓய்வுபெற்ற தளபதி ஷிவதா ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: