10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை

ஈரோடு, பிப்.21:  ஈரோட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஈரோடு கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கினர். தேர்வு துறை உதவி இயக்குநர் யாமினி, கல்வி மாவட்ட அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவியர் தேர்வு பயத்தை போக்கி, தேர்வினை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு மன ரீதியான பயிற்சி அளிக்க வேண்டும்.

அவர்களின் மன அழுத்தத்தை குறைத்து தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். தேர்வு நேரத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அதிகாரிகள் பேசினர். இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு தேர்வு மைய பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் போன்ற பட்டியல் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் என 360 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: