×

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வருகை

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் நேற்று கொண்டு வரப்பட்டது. வினாத்தாள் பண்டல்கள் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. அதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கு வினாத்தாள் நேற்று சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதியும் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்காக அச்சிடப்பட்டுள்ள வினாத்தாள்கள் நேற்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ேபாலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கான வினாத்தாள்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலையில் வினாத்தாள் வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் இறக்கி வைக்கப்பட்டது.பின்னர், செங்கம், போளூர், செய்யாறு, ஆரணி ஆகிய கல்வி மாவட்ட வாரியாக வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, அந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.அவ்வாறு வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களுக்கு ஒரே ஒரு வாசல் வழியை தவிர வேறு எந்த வழிகளும், ஜன்னல்களும் இல்லாதவாறு அமைக்கப்பட்டுள்ள அறையில் வினாத்தாள் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.மையத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாதுகாப்பு இல்லாமல் இருந்த வினாத்தாள் பண்டல்கள்

Tags : District ,Primary Education Office ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்