×

செய்யாறு நகரில் டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் வணிகர் சங்கத்தினர் போஸ்டரால் பரபரப்பு

செய்யாறு, பிப்.21: செய்யாறு நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் கடைகளை வரும் 28ம் தேதிக்குள் அகற்றாவிட்டால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என வணிகர்கள் சங்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செய்யாறு நகர அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், செய்யாறு நகரம் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:செய்யாறு நகரில் ஆரணி கூட்ரோடு மற்றும் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையூறாக இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளையும் வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்.அவ்வாறு அகற்றாவிட்டால், செய்யாறு நகர அனைத்து வணிகர்கள் சங்க வியாபாரிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்களுடன் இணைந்து 2 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.வ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
=======================================================

Tags : Poster strike ,siege ,district administration ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்