×

அனுமதியின்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்த ஊராட்சி தலைவரின் கணவர் மீது அறநிலையத்துறையிடம் புகார் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, பிப்.21: ஆரணி அருகே அனுமதியின்றி கோயில் சுற்றுச்சுவர் இடித்த ஊராட்சி தலைவரின் கணவர் மீது அறநிலையத்துறை அதிகாரியிடம் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பார்வதி அகரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வர் கோயில் உள்ளது. கோயில் அருகில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.பழமை வாய்ந்த கோயில் என்பதால், புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யவும், கோயில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ள இரண்டு பக்கமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கோயில் நிர்வாகம் சார்பில் புனரமைத்து, சுற்றுச்சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு செய்து அதிகாரிகள் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.இந்நிலையில், ஊராட்சி தலைவர் கிளியம்மாள் கலாமணி நேற்று முன்தினம் தொடக்கப்பள்ளி அருகே உள்ள கோயில் சுற்றுச்சுவரை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தார். இதற்கு கோயில் முன்னாள் தலைவர் சீனிவாசன், கோயில் நிர்வாகிகள் சுற்றுச்சுவர் இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு ஊராட்சி தலைவரின் கணவர் கலாமணி நாங்கள் இந்து சமய அறநிலையத்துறையில் அனுமதி பெற்றுதான் சுற்றுச்சுவர் இடிக்கிறோம். அந்த இடத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.இதையடுத்து, சீனிவாசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் போளூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ரவிகணேசன் செல்போனில் தொடர்பு கொண்டு கோயில் சுற்றுச்சுவரை இடிக்க அனுமதி வழங்கி உள்ளீர்களா என்று கேட்டார்களாம். அதற்கு அவர் எந்த அனுமதியும் வழங்கவில்லை என கூறியதாக தெரிகிறது.இதையடுத்து, சீனிவாசன் போளூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ரவிகணேசனிடம் கோயில் சுற்றுச்சுவரை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்த கலாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தார்.ஊராட்சி தலைவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags : panchayat ,department ,Arani ,
× RELATED தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது