×

தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில்

தண்டராம்பட்டு, பிப்.21: தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில் அடைப்பான் தடுப்பூசி முகாம் நடந்தது.தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில் நேற்று கால்நடைகளுக்கு அடைப்பான் தடுப்பூசி சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தனக்கோடி தலைமையில் நடந்தது.முகாமில் உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கால்நடைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும். கோடைகாலம் தொடங்குவதால் 3 வேளை தண்ணீர் தீவனம் கொடுக்க வேண்டும். ஆடு, மாடுகளை வெயில் உள்ள பகுதியில் கட்டக்கூடாது.கால்நடைகளின் உடலில் ஏதாவது மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இம்முகாமில் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. கால்நடைகளுக்கு உண்ணி எவ்வாறு பரவுகிறது அதை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்.இதில் வாணாபுரம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சாந்தி, ஆவின் சினை ஊசி ஊக்குநர் காந்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாலதி, ஊராட்சி செயலாளர் ரகு உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : village ,Dandarampattu ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...