×

டிக்-டாக் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ய கணவனால் பரபரப்பு

வேலூர், பிப்.21: வேலூரில் குடும்பத்தை கவனிக்காமல் டிக், டாக்கில் மற்றொரு ஆணுடன் ஆடல், பாடல் வீடியோ பதிவிட்டு பழகிய மனைவியை, விவாகரத்து செய்யும் கணவன் எடுத்துள்ள முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் நாளுக்கு நாள் புதிது புதிதாக செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான செயலிகள் விளையாட்டு, பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது.பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட டிக், டாக் செயலியால் இன்றைக்கு பல குடும்பங்கள் நிம்மதி இழந்து தவித்து வருகிறது. இந்நிலையில் டிக், டாக் செயலியால் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக வேலூரை சேர்ந்த இளம்பெண் குடும்பத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:வேலூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளம்பெண் டிக்டாக் செயலியில் அடிக்கடி பாடல், வசனம், நடனம் உள்ளிட்டவற்றை வீடியோவாக பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரது டிக், டாக் பதிவுகளை, வேலூரில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டத்தை சேர்ந்த திருமணமான 32 வயது வாலிபர், லைக், கமாண்ட் கொடுத்து பின் தொடர்ந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு டிக், டாக்கில் பின்தொடர்ந்த நிலை மாறி, பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு எஸ்எம்எஸ் அனுப்பி பழகி நாளடைவில், இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இளம்பெண் குழந்தைகளை கவனிக்காமல், சமையல் செய்யாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன், மனைவியின் செல்போனை பார்த்தபோது, டிக், டாக் செயலிக்கு அடிமையாகி, மற்றொரு வாலிபருடன் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் கணவன் டிக், டாக் செயலியை விட்டு வெளியே வா? என்று கூறியும், மற்றொரு ஆணுடன் இருந்த தொடர்பை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனை இளம்பெண் கேட்டவில்லையாம். இதனால் அவரது கணவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரின், தனியார் நிறுவனத்தில் புகார் தெரிவித்து, அவரை வேலையை விட்டு நிறுத்தி, அறிவுரை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தொடர்ந்து, இளம்பெண்ணுக்கும், போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இருப்பினும், இளம்பெண்ணின் கணவர் என் மனைவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளேன் என்று போலீசாரிடம் கூறிவிட்டு சென்றாராம். இப்படி வேலூரில் இளம்பெண் டிக், டாக் மோகத்தால் வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tic-tac-toe ,
× RELATED டிக்டாக் வீடியோ சாகசம் 13 வயது சிறுவன் பலி