×

மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல் காரைக்கோவில்பத்து அரசு பள்ளி ஆண்டு விழா

காரைக்கால், பிப்.21: காரைக்கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுவிழா நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பள்ளி துணை முதல்வர் விஜயமோகனா தலைமை வகித்தார். மூத்த விரிவுரையாளர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி, உதவிப்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். ஆண்டு அறிக்கையை உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி வாசித்தார். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

Tags : Democratic Party ,Karaikovil State Government Anniversary ,
× RELATED கறம்பக்குடி அரசு தாலுகா தலைமை...