×

காரைக்காலில் குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

காரைக்கால், பிப்.21: காரைக்காலில் குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.காரைக்கால் வலத்தெரு காளியம்மன் கோவில் பேட்டையை சேர்ந்தவர் வேலாயுதம்(50). கூலி தொழிலாளி. இவர், வீட்டின் அருகே உள்ள குளத்தில், கை, கால்கள் கழுவ இறங்கியபோது, தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர், நகர காவல்நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடலை கைபற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wage worker ,pool ,Karaikal ,
× RELATED மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: கூலி தொழிலாளி கைது