×

நாகை மாவட்டத்தில் உழவர் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாகை,பிப்.21: வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்ட பயனாளிகள் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு உழவர்கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த 14ம் தேதி துவக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு உடனடியாக உழவர் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி நில ஆவணம், அடங்கலுடன் கடன் அட்டையை மானிய சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே கடன் அட்டை பெற்றவர்கள், கடன் உச்ச வரம்பை அதிகரித்து கொள்ளலாம். செயலிழந்த அட்டை உடையவர்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களுக்கான கடன் தொகையை பெறலாம். எனவே பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்ட பயனாளிகள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளை அணுகி 1 பக்க படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Nagai ,
× RELATED தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால்...