தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் ஸ்மார்ட் உலக டிஜிட்டல் வாழ்க்கை கருத்தரங்கம்

தஞ்சை, பிப். 21: தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை, இயற்பியல் துறை இணைந்து “ஸ்மார்ட் உலக டிஜிட்டல் வாழ்க்கை” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது. பாரத் கல்வி குழுமங்களின் செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்து உரையாற்றினார். பாரத் கல்லூரி இயக்குனர் வீராசாமி, முதல்வர் குமார், மேலாண்மைத்துறை இயக்குனர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சிறப்பு அழைப்பாளர்களாக கும்பகோணம் அன்னை கல்லூரி கணினித்துறை உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி இயற்பியல்துறை இணை பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்று கருத்தரங்க உரையாற்றினர். கணினி பயன்பாட்டியல் துறை மாணவி மதுமிதா வரவேற்றார். கருத்தரங்கில் பாரத் கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறையின் தலைவரும் துணை முதல்வருமான பேராசிரியர் அறவாழி, இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.

Related Stories: