நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கூட்டுறவு சங்க தலைவர் அதிரடி நீக்கம்

தஞ்சை,பிப்.21: தஞ்சாவூர் அரசு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் வெற்றி பெற்றதையடுத்து தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட, மாநில அரசு ஊழியர்கள் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் 1,580 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைவராக தஞ்சாவூர் கலால் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் பொறுப்பு வகித்து வந்தார்.இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த தங்கபிரபாகரன், சங்கத்தின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என சங்கத்தின் 9 இயக்குநர்களும் கடந்த டிசம்பர் மாதம் கூட்டுறவு சங்க துணை பதிவாளரிடம் மனு அளித்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் கூட்டுறவு சார்பதிவாளர் மல்லிகா முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் சங்க அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டது.அப்போது 9 இயக்குநர்களும் தலைவருக்கு எதிராக வாக்களித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெற செய்தனர். இதையடுத்து தலைவர் பொறுப்பிலிருந்து தங்கபிரபாகரன் நீக்கப்பட்டதாகவும், துணைத்தலைவராக உள்ள அய்யம்பெருமாள் தலைவராக பொறுப்பு வகிப்பார் என கூட்டுறவு சங்கத்தின் இயக்குநரகம் தெரிவித்தது.

Related Stories: