மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தஞ்சை, பிப். 21: தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.தஞ்சை அருகே மாதாக்கோட்டை ஊராட்சி பகுதி மக்களிடமிருந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை மனு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது தேவையான அடிப்படை வசதி, பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருவது, வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள இடம், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான வசதிகள், கால்நடை துறையின் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இடவசதிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். மேலும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களின் விவரங்கள், அவர்களுக்கு தனியாக உரிய நிறத்தில் டிசர்ட் வழங்கப்படும் விவரத்தையும் கேட்டறிந்தார்.ஆய்வின்போது எஸ்பி மகேஸ்வரன், ஆர்டிஓ வேலுமணி, தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: