மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

கும்பகோணம், பிப். 21: கும்பகோணம் அடுத்த முத்துபிள்ளைமண்டபத்தில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் பேபி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் ஞானவள்ளி முன்னிலை வகித்தார்.இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, மூளைமுடக்கு வாதமுள்ள குழந்தைகளுக்கு நாற்காலி, காதொலி கருவி, நடை வண்டி என 40 பேருக்கு பல்வேறு உபகரணங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் கோமதி வழங்கினார். மேலும் தூய்மை பாரதம் குறித்து மாவட்ட அளவில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: