தஞ்சை தனிஷ்க் ஜூவல்லரியில் இருதய நோயாளிகளுக்கு மீட்பு பயிற்சி

தஞ்சாவூர், பிப். 20: தஞ்சை தனிஷ்க் ஜூவல்லரியில் உயிர்காக்கும் சிபிஆர் பயிற்சி நடந்தது. தஞ்சை புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் குடும்பத்தினர் சார்பில் டாக்டர் ரவிக்குமார் இந்த பயிற்சியை தஞ்சை மக்களுக்கு செயல்விளக்கத்துடன் அளித்தார். தஞ்சை பகுதி குடிமக்கள் பயிற்சியில் இலவசமாக பங்கேற்று ஒருவரின் வாழ்க்கையில் ஒரு உயிர் காப்பாளராகுவதற்கான விளக்கங்களை பெற்றனர். அதிக எண்ணிக்கையிலான பயிற்சி சாதனங்களை லார்ட்ஸ் மெடிக்கல் இந்தியா வழங்கியது. உலக இதய தினமான வரும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் 1,000க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு சிபிஆர் பயிற்சியளிப்பதன் மூலம் திடீரென இருதயநோயால் பாதிக்கப்பட்டவர்களை மரணத்திலிருந்து மீட்பதற்கான உலகளாவிய முயற்சியாக உள்ளது. உலகளாவிய நிபுணர் பேராசிரியர் டிஎஸ்.ரவிக்குமார் பயிற்சி திட்டத்தை நடத்தியதில் பிபிடிஎஸ் பெருமிதம் கொள்கிறது. 2016-2019ம் ஆண்டில் 70,000 குடிமக்களுக்கு டாக்டர் ரவிக்குமார் பயிற்சி அளித்துள்ளார்.

Related Stories: