×

மானிய திட்டங்கள் பெற உழவன் செயலியை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்

திருவாரூர், பிப்.20: திருவாரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி பயனடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, உழவன் செயலி மூலம் விவசாயிகள் அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு விவரம், பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தினசரி சுற்றுப்பயண விவரம், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணைய பொருட்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். எனவே இதில் தங்களுக்கு எந்த திட்டத்தில் பயன் வேண்டுமோ அந்த திட்டத்தில் விண்ணப்பங்களை இந்த உழவன் செயலி மூலமே அனுப்பி வைக்கலாம். இந்த செயலி மூலம் வந்த விண்ணப்பங்களை பார்வையிட்டு வேளாண்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்து விவசாயிகளை சந்தித்து திட்ட பயன்களை பெற உதவுவார்கள் எனதெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு வழங்கப்படும்...