×

முத்துப்பேட்டை 4 வது வார்டில் பல்லாங்குழியாக இருந்த சாலை சீரமைப்பு

முத்துப்பேட்டை, பிப்.20: முத்துப்பேட்டை 4வது வார்டில் பல்லாங்குழியாக இருந்த சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 4 வது வார்டு முத்துப்பேட்டை நகரில் முக்கிய பகுதியாகும். இங்குள்ள சாலைகள் அமைத்து சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் அணைத்து சாலைகளும் உலக நாடுகளின் வரைப்படங்கள் போன்று பள்ளம் படுங்குழியாக காட்சியளித்தது. இதில் முக்கிய சாலையாக கருதப்படும் யூனியன் ஆபீஸ் சாலை, புதுக்காளியம்மன் கோயில் தெரு சாலை, டாக்டர் மீரா உசேன் சாலை, திருமண மண்டபம் சாலை ஆகிய நான்கு சாலைகளுக்கும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் படுங்குகுழியாக இருந்தது. இதில் யூனியன் ஆபிஸ் சாலையில் ஒன்றிய அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ரயில்வே நிலையம் மற்றும் ஹோட்டல் உட்பட ஏராளமான கடைகள் குடியிருப்புகள் ஆகியவை உள்ளது. இவ்வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சேதமான சாலை குறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அதேபோல் பல ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பலனுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இப்பகுதி மக்கள் நலன் கருதி சாலையை உடனே போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என சுட்டிக்காட்டி கடந்த அக்டோபர் 21ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் யூனியன் ஆபீஸ் சாலையை சீரமைக்க ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி சமீபத்தில் சாலை சீரமைப்பு பணி துவங்கி தற்பொழுது 90 சதவீதம் நிறைவு பெற்றது.  இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிவஅய்யப்பன் கூறுகையில், சரியான நேரத்தில் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், அவசியத்தை உணர்ந்து நிதி ஒதுக்கீடு செய்த எம்எல்ஏ ஆடலரசனுக்கும் நன்றி என்றார்.

Tags : ward ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி