×

ஐதராபாத் நகருக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் 2 நாள் கல்வி சுற்றுலா

காஞ்சிபுரம், பிப்.20: மத்திய அரசின் ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற பள்ளி மாணவர்களை சிறப்பு வாய்ந்த வெளிமாநில நகரங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம், உத்திமேரூர், பொன்னியம்மன் பட்டறை, கீழ்கதிர்பூர், தேனம்பாக்கம், மேட்டுக்குப்பம், இளநகர், மருதம், வயலக்காவூர், பென்னலூர், சிறுவாக்கம், வளத்தூர் ஆகிய நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 30 மாணவர்களும், அவளூர், கடுக்களூர், ஏகனாம்பேட்டை, வாலாஜாபாத் ஆகிய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகருக்கு 2 நாள்  கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்த மாணவர்களுடன் வழிகாட்டி மற்றும் பாதுகாவலர்களாக அங்கம்பாக்கம் பள்ளி ஆசிரியர் தி.சேகர், உத்திமேரூர் பள்ளி ஆசிரியர் அன்பழகன்,  அவளூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சந்திரசேகரன் கடுக்களூர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கௌதம்ராஜ் உள்பட 10 ஆசிரியர்கள் சென்றனர்.இதையொட்டி, மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் நடந்தது. காஞ்சிபுரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், நந்தாபாய், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர்  ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

Tags : tour ,government school students ,Hyderabad ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு