×

அதிகாரிகள் அலட்சியம் சிவகாசி ஆவின் பூங்காவில் பராமரிப்பின்றி கருகும் செடிகள்

சிவகாசி, பிப். 20: சிவகாசி ஆவின் பூங்காவில் வளர்க்கப்படும் அழகுச் செடிகளும், புற்களும் முறையான பராமரிப்பில்லாமல் காய்ந்து சருகாக மாறி வருகின்றன. சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் கடந்த ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் ஆவின் பாலக பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பாலகத்தில் ஆவின்பால் மற்றும் உப பொருள்களான நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம்பவுடர் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கல், சீசா மற்றும் பெரியவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் கிரானைட் கல் இருக்கைகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன அழகான புல்தரைகள், பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள், குரோட்டன்ஸ் செடிகள் போன்றவை வளர்க்கப்பட்டுள்ளன. இதனால் ஆவின் பூங்கா செல்வதே இனிய அனுபவமாக இருக்கும்.

சிவகாசி மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆவின் பாலக பூங்காவில் நீண்ட நேரம் குழந்தைகளுடன் பெற்றோர்கள் சந்தோசமாக நேரம் செலவிடுகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த ஆவின் பூங்காவில் வளர்க்கப்பட்ட புற்கள், செடிகள் காய்ந்து சருகுகளாக மாறிவிட்டன. அழகான புல்தரைகள் காய்ந்து நிலையில் காட்சியளிக்கின்றன. பராமரிப்பில் அலட்சியம் அதிகாரிகளின் ஆய்வில் அலட்சியம் காரணமாக சிவகாசி ஆவின் அதன் அழகை இழந்து வருகின்றது.

சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறுகையில், ‘முன்பு தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடப்பட்டது. கடந்த சில வாரங்களாக தண்ணீர் விடாததால் செடிகள், புல் தரைகள் அனைத்தும் பட்டுப்போய்விட்டன. மீண்டும் இந்த புல் தரைகள், செடிகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். சிவகாசி ஆவினை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பராமரிப்பிற்கு கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும். ஆவின் விற்பனையை அதிகாரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். தனியார் பால் விற்பனையாளா–்களுக்கு ஆதரவாக இல்லாமல் அரசிற்கும் ஆவினுக்கு விஸ்வாசமாக இருக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : plants ,park ,Sivakasi Aavin ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...