×

மாவட்டம் தனியார் கேட்டரிங் கல்லூரி உணவு திருவிழா நிகழ்ச்சியை கண்காணிக்க முடிவு

சிவகாசி, பிப். 20: தனியார் கேட்டரிங் கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திடும் மெகா உணவு திருவிழா நிகழ்ச்சியில் தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிவகாசி-திருவில்லிபுத்ததூர் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கேட்டரிங் கல்லூாியில் மெகா உணவு திருவிழா என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் சின்னதிரை நட்சத்திரங்கள், டிவி சீரியல் நடிகர்கள் கலந்து கொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி திறந்தவெளி மேடையில் நடத்தப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட புட்கோர்ட்கள் அமைக்கப்பட்டு ஆடு, கோழி, மீன், நண்டு இறைச்சி சமைத்து வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வதால் முன்னதாகவே இறைச்சிகளை வாங்கி பிரீசரில் வைத்து சமைத்து வழங்குகின்றனர். கல்லூரி வளர்ச்சி நிதிக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் உணவு பொருட்கள் தரமாக வழங்கப்படுவதில்லை என பொது மக்களிடம் குற்றசாட்டு எழுந்தது. இதில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு வயிற்று போக்கு, வாந்தி ஏற்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஒரு வருடம் இந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டு உணவு திருவிழா நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் புகாரை தொடாந்து உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தாண்டு உணவு பொருட்களை சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கடல் வகை உயிரின இறைச்சி உணவு திருவிழாவில் பயன்படுத்தப்படவுள்ளதா–்ல் சுகாதார துறையினரும் ஆய்வு நடத்த உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடல் உயிரினங்கள் முறையான பரிசோதனைக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் கூறுகையில், ‘சிவகாசியில் உணவு திருவிழா நடத்தபடவுள்ளதாக தகவல் வந்தது.
இந்நிகழ்ச்சிக்கு முன் அனுமதி எதுவும் பெற வேண்டியதில்லை. ஆனால் கல்லூரி விடுதிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கல்லூரி வளாக பகுதியில் உணவு திருவிழா நடத்தி கொள்ள அனுமதி உண்டு. இருப்பினும் கெட்டுப்போன உணவு, பிரீசரில் வைத்த இறைச்சி போன்றவற்றால் பொதுமக்களுக்கு புட்பாய்சன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் முன்னதாகவே கல்லூரி நிகழ்ச்சியில் வழங்க உள்ள உணவு பொருட்களை சோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்