×

கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு பறிக்கும் பணி தீவிரம்

வருஷநாடு, பிப்.20: கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு வருசநாடு, மயிலாடும்பாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், தர்மராஜபுரம், தங்கம்மாள்புரம், உப்புத்துறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களில் இலவம்பஞ்சு சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரண்டு வேளைகளில் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் இலவம்பஞ்சு பறிக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்கள். தற்பொழுது இலவம் பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ.110 லிருந்து ரூ.112 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இந்த இலவம் பஞ்சு வாங்குவதற்காக மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவம் மரம் விவசாயம் விவசாயிகள் செய்து வருகிறார்கள். தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் பஞ்சுகள் வெயிலின் தாக்கத்தால் அதிக அளவில் உதிர ஆரம்பித்துள்ளது. கூலி விவசாயிகள் இலவம் பஞ்சு பறிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு சுமார் ரூ.500 முதல் 600 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.

Tags : Kadamalai ,
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?