×

முல்லையாற்றில் பராமரிப்பு பணிகள் நடத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

உத்தமபாளையம், பிப்.20: உத்தமபாளையம்-பழனிசெட்டிபட்டி வரை முல்லையாற்றில் தண்ணீர்செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடு என சரிந்து வருகிறது. கம்பம் பள்ளதாக்கில் ஒரு சில இடங்களில் இரண்டாம் போக நடவிற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். காரணம் போர்வெல் மூலம் செய்யப்படும் விவசாயத்திற்கு இது ஏதுவாக உள்ளது. ஆனால் மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் இன்னும் குடி தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் பெரியாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது முள்புதர்களாலும், நீர்வழித்தடங்களில் ஏற்படக்கூடிய குப்பைகூளங்களாலும் தண்ணீர் தேங்குகிறது. இருந்தபோதிலும் இந்த தண்ணீர் விவசாயத்திற்கும் குடிநீர்க்கும் பயன்படுத்தப்படுகிறது.

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் எந்தஇடத்திலும் தேங்காமல் இருப்பதற்காக கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை மராமத்து பணிகள் நடைபெறவேண்டும். குறிப்பாக உத்தமபாளையத்தில் ஆற்றுப்படுகையின் இரண்டுபுறமும் உள்ள செடிகள், இடையூறான புதர்மேடுகள் அகற்றப்படவேண்டும். பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடந்தால் பணிகள் வேகப்படும். விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 115 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து சுத்தமாக இல்லை. கோடைக்காலம் தொடங்கிவிட்டால் முல்லையாற்றில் தண்ணீர் வராது. அந்த காலங்களில் கூடலூர், பாளையம், கம்பம் என அனைத்து ஊர்களிலும் ஆற்றுப்படுகையில் பராமரிப்பு பணிகள் நடக்கவேண்டும். இதற்கு பொதுப்பணித்துறை திட்டவரைவினை இப்போதே தயார் செய்யவேண்டும் என்றனர்.

Tags : Mullaitivu ,
× RELATED முல்லைத்தீவு அருகே மீன்பிடித்து...