×

கடையத்தில் குழாய் உடைப்பால் சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

கடையம்,பிப்.20: கடையத்தில்  குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலை பள்ளமாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடையம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. கடையம் மெயின் ரோட்டில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீரோடையில் கலக்கிறது. குடிநீர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அடுத்தடுத்து பள்ளங்கள் உருவாகி வருகிறது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி விழுகின்றன. பஸ், லாரி ஆகிய கனரக வாகனங்கள் செல்லும் போது உடைப்பு பள்ளத்தில் விழுந்து தண்ணீர் கடை மற்றும் பொதுமக்கள் மீது தெறிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

 தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருவதால் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முறையான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களை தவிர்த்து வாகனங்களை இயக்கும் போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Motorists ,road ,garage ,pipe break ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி