×

சிக்னல் கோளாறு நெல்லைக்கு தாமதமாக வந்த செங்கோட்டை ரயில்

நெல்லை, பிப்.20: செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக செங்கோட்டை ரயில் நேற்று நெல்லைக்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தது. செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு நெல்லை பயணிகள் ரயில் வருவது வழக்கம். இந்த ரயிலை அலுவலகங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 6.50 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்ட ரயில், விஸ்வநாதபுரம் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. நெல்லைக்கு காலை 8.50 மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில், சுமார் அரைமணிநேரம் தாமதமாக காலை 9.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள் சிரமப்பட்டனர்.

Tags : railway ,Red Fort ,
× RELATED செங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்