×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா சங்கரன்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் அமைச்சர் ராஜலட்சுமி தகவல்

சங்கரன்கோவில், பிப்.20:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்ேகாவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் அதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தாவது, வரும் 24ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அன்று அரசு மருத்துமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரமும், அதனை தொடந்து திருவேங்கடம் சாலையில் உள்ள பரக்கத் மகாலில் வைத்து 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், கழகத்தின் மூத்த முன்னோடிகளை கவுரவப்படுத்தும் நிகழ்வும், அனைத்து பகுதிகளிலும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.பிப் 25ம் தேதி சங்கரன்கோவில் டிடிடிஏ வளாகத்தில் உள்ள பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் மார்ச் மாதம் 7, 8ம் தேதிகளில் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : Jayalalithaa Birthday Celebrations ,Sankarankoil ,
× RELATED மஞ்சூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்