×

எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

நெல்லை, பிப். 20: பிளஸ்1, பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நெல்லை மற்றும் ெதன்காசி மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 443 பேர் எழுதுகின்றனர். பிளஸ்2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து மார்ச் 4ம் தேதி பிளஸ்1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், பிளஸ்1 தேர்வை  8லட்சத்து, 26 ஆயிரத்து 82 பேரும், பிளஸ்2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேரும் எழுதுகின்றனர். இந்த 3 வகுப்புகளையும் சேர்த்து 25 லட்சத்து 87 ஆயிரத்து 9 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 5 கல்வி மாவட்ட அளவில் பிளஸ்1 பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 780 மாணவர்களும், 20 ஆயிரத்து 413 மாணவிகளும் என 37 ஆயிரத்து 193 பேர் எழுத உள்ளனர்.

இதுபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த இரு மாவட்டங்களில் 16 ஆயிரத்து 113 மாணவர்களும், 20 ஆயிரத்து 427 மாணவிகளும் என 36 ஆயிரத்து 540 பேர் எழுத உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 42 ஆயிரத்து 710 பேர் எழுத உள்ளனர். வழக்கம் போல் தேர்வு எழுதுபவர்களில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 167 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுத உள்ள சிறப்பு மாணவர்களுக்கு தேவையான தனி வசதிகள் செய்யப்படுகின்றன. தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அங்கு தேர்வுஎழுத வரும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்படு கின்றன.

Tags : districts ,election ,
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை