×

இறகு பந்து போட்டி வெற்றியால் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

தொண்டி, பிப். 20: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான இறகு பந்து போட்டி ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தொண்டி மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்றது. இறகு பந்து போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்தகொண்டது. இதில் தொண்டி ஐஎம்எஸ் பள்ளி மாணவர் அஹமது யாசின் மற்றும் கல்யாண மூர்த்தி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாணவர்களை பாராட்டி பள்ளியில் நிறுவனர் சாதிக் காசியார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நிர்வாகிகள் ஆரோக்கிய தாஸ், ஜிப்ரி தலைமயில் நடந்தது. தெய்வேந்திரன், பயாஸ் சாதிக் பாட்சா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் செந்தில் குமார், பயிற்ச்சியாளர் சசிகுமார், மாவட்ட இறகு பந்தாட்ட துணை செயலாளர் சசிகுமார் பரிசளித்தனர்.

Tags : feather ball competition ,state competition ,
× RELATED இறகுப் பந்து போட்டி