×

பெட்ரோல் பல்க்கில் ரூ.2000 கள்ள நோட்டு கொடுத்தவருக்கு வலை

மானூர், பிப்.20: மானூர் அருகேயுள்ள ராமையன்பட்டியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நடத்தும் பெட்ரோல் பல்க் உள்ளது. இங்கு நேற்று தனது வாகனத்திற்கு டீசல் நிரப்பிய ஒருவர் அதற்காக ரூ.2000 நோட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அங்குள்ள பணியாளர்கள் ரூபாய் நோட்டை உற்று பார்த்தபோது சற்று வித்தியாசம் தெரியவே இயந்திர உதவியுடன் அது கள்ள நோட்டு என கண்டறிந்தனர்.இந்நிலையில் வாகனத்தின் எண் தெரியவந்ததால் இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேற்பார்வையாளர் காதர்மைதீன் (40) மானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தில் வந்தவரை தேடி வருகிறார்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு