×

காரைக்குடியில் பள்ளி, கல்லூரி வேளையில் தொடரும் படிக்கட்டு பயணம் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

காரைக்குடி, பிப். 20: காரைக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேவைக்கு ஏற்ப காலை, மாலை வேளைகளில் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்காததால் படிக்கட்டில் தொங்கி செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி பகுதியில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவில் அரசு பஸ் இயக்கப்படாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பஸ்களில் மாணவர்கள் தொங்கி கொண்டு சென்றாலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இது ஒருபுறமென்றால் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் பஸ்கள் மிகமோசமாக பழுதடைந்து பயணிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளன. இதனால் தினமும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் பழுதடைந்து விடுவதும், விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகின்றன.

சாதாரண மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவது அரசு பஸ்களை தான். பள்ளி கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் தான் பயணம் செய்கின்றனர். ஆனால் இவர்களது பயணத்திற்கு காலை, மாலை வேளைகளில் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை கண்கொள்ளாமல் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படிக்கட்டில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் பலியானார். அதன்பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படிக்கட்டு பயணங்களை ஓரளவு கட்டுப்படுத்தினர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டு தற்போது முற்றிலும் கைவிடப்பட்ள்ளது. ஒவ்வொரு சம்பத்துக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் மட்டுமே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே காரைக்குடியில் படிக்கட்டு பயணங்களால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன்பு சுதாரித்து பள்ளி கல்

Tags : school ,Karaikudi ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி