×

கூட்ட நெரிசலால் தவிப்பு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் மாணவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, பிப்.20:  முதுகுளத்தூர் அரசு கல்லூரிக்கு சென்று வர காலை, மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘ கடந்த 2012-13ம் ஆண்டில் முதுகுளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வந்த தற்காலிக கல்லூரிக்கு  முதுகுளத்தூர்-தேரிருவேலி-ராமநாதபுரம் வழித்தட  சாலையோரம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் 2017ல் திறக்கப்பட்டது. இங்கு இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதுகுளத்தூர் பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் முதுகுளத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு வந்து, செல்ல காலை, மாலை நேரத்திற்கு அவ்வழியாக பஸ் வசதியில்லாததால் தினந்தோறும் சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து, செல்லும் நிலை உள்ளது. எனவே கல்லூரி நேரத்திற்கு சென்று, வர காலை, மாலை நேரங்களில் முதுகுளத்தூரிலிருந்து கல்லூரிக்கு கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் கூறும்போது, தொலைவிலுள்ள பல்வேறு கிராமங்களில் அதிகாலையில் கிளம்பி, முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்து, சுமார் அரை மணி நேரம் நடந்து சென்று கல்லூரிக்கு வரும் நிலை உள்ளது. மழை மற்றும் தேர்வு காலங்களில் கல்லூரிக்கு வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதனை போன்று கல்லூரி முடிந்து வீடுக்கு செல்ல பிற்பகலில் ராமநாதபுரம்-முதுகுளத்தூர் வழித்தடத்தில் போதிய பஸ் வசதி கிடையாது. பஸ்ஸில் கூட்டமாக செல்ல முடியாது என்பதால் சில மாணவர்கள் மட்டுமே ஏறிச்சென்று, மீதமுள்ள மாணவர்கள்  சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணிநேரம் வரை பஸ்சுக்கு காத்து கிடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே கல்லூரிக்கு காலை, மாலை நேரத்தில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு டவுன் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம், கும்பகோணம் உட்கோட்டம், முதுகுளத்தூர் போக்குவரத்து கிளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : bus students ,
× RELATED கூட்ட நெரிசலால் தவிப்பு அரசு...