×

மூங்கிலணை அம்மன் கோயிலுக்கு சிறப்பு பஸ்

திண்டுக்கல், பிப். 20: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ளது அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நாளை (பிப்.21) முதல் பிப்.28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு வத்தலக்குண்டு, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனியில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக மேற்கண்ட இடங்களில் இருந்து நாளை முதல் பிப்.28ம் தேதி வரை அதிகளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்து வருகிறது.

Tags : Amman ,
× RELATED விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...