சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி, ஏரலில் காங். ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, பிப்.20: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மத்திய அரசு உயர்த்தியுள்ள காஸ் சிலிண்டர் விலையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்  தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே  தூத்துக்குடி மாவட்ட மாநகர, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்  முரளிதரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் தங்கராஜ், செந்தூர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி காங்கிரசார்  சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சந்தனம் வைத்து, ஒரு ரூபாய் நாணயம் வைத்திருந்தனர்.  பின்னர் நான் இருக்கிறேன், கவலைபடாதீர்கள் என்ற வாசகம் அடங்கிய மண்பானையை அடுப்பில் வைத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.  

இதில் மாவட்ட சேவா தள தலைவர் சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் முத்து விஜயா, முன்னாள் தலைவர் கனியம்மாள், மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஏரல்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் படி ஏரலில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஆனந்தமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் இசைசங்கர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவனணைந்த பெருமாள், வை. யூனியன் கவுன்சிலர் பாரத், வட்டாரத் தலைவர்கள் வைகுண்டம் நல்லகண்ணு, ஆழ்வை கோதண்டராமன், சாத்தான்குளம் ஜனார்த்தனம், கருங்குளம் புங்கன், திருச்செந்தூர் சற்குரு, நகர தலைவர்கள் சாயர்புரம் ஜேக்கப், ஆத்தூர் பாலசிங், வைகுண்டம் சித்திரை, ஓபிசி மாவட்ட தலைவர் தாசன், ஐஎன்டியூசி சந்திரன், சிவகளை பிச்சையா, மற்றும் காந்தி காமராஜ், அந்தோணி காந்தி, குமரேசன் உட்பட பலர் பங்ேகற்றனர்.

Related Stories: