×

பாலசமுத்திரத்தில் மகளிர் சுயதொழில் பயிற்சி முகாம்

பழநி, பிப். 20: பாலசமுத்திரத்தில் நடந்த சுயதொழில் பயிற்சி முகாமில் ஏராளமான மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் லோட்டஸ் அறக்கட்டளை, எம்ஆர்ஆர் அறக்கட்டளை சார்பில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கான சுய தொழில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமினை எம்ஆர்ஆர் அறக்கட்டளை இயக்குநர் ராஜவர்மன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். லோட்டஸ் அறக்கட்டளை நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தார். மதுரை காந்தி மியூசியம் தொழில்முனை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் செய்முறை பயிற்சி மூலம் தொழிற்பயிற்சி அளித்தார். முகாமில் பெருங்காயம் தயாரித்தல், துணி துவைக்கும் பவுடர் தயாரித்தல், பாத்திரம் கழுவுவதற்கான ஜெல் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மகளிர்சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,Balasamudram ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...