×

பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நாளை துவக்கம்

பழநி, பிப். 20: பழநி மாரியம்மன் கோயிலின் மாசி திருவிழா நாளை முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்க உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் 39 உபகோயில்கள் உள்ளன. இதில் பழநி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் பழநி நகர் பகுதியிலிருந்து மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இத்திருவிழா வரும் நாளை (பிப்.21, வெள்ளி) இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்யா லக்னத்தில் ஊன்றுதலுடன் துவங்க உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிப். 25ம் தேதி திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

தொடாந்து வரும் மார்ச் 3ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நாட்களில் வெள்ளியானை வாகனம், தங்கக்குதிரை வாகனம், வெள்ளி ரிஷப வாகனங்களில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் துலா லக்னத்தில் மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும்,  மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதி இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான திருக்கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : Pasani Mariamman Temple Masi Festival ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு