×

தம்மம்பட்டி அருகே சுவேத நதியில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு

தம்மம்பட்டி, பிப்.20: கொல்லிமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் பெரியாறு, வரட்டாறு தம்மம்பட்டி பகுதியில் இணைது சுவேத நதியாக உருவெடுத்து செல்கிறது. இந்நிலையில், தண்ணீரை சேமிக்க கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, சுமார் ₹11லட்சம் செலவில் தடுப்பணை கட்டபட்டது. இதனால் சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் ஏராளமான நாட்கள் தண்ணீர் தேங்கி, விவசாயம் செழிப்புடன் நடந்தது. மேலும் தம்மம்பட்டி பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, மக்களின் தண்ணீர் பிரச்னையும் குறைந்தது. ஆனால், தற்போது அந்த தடுப்பணை உடைந்து, தண்ணீர் தேங்காமல் வீணாகி வருகிறது. இப்பகுதியில் தடுப்பணை கட்ட கோரி, கடந்த மாதம் 27ம் தேதி, கலெக்டரிடம் இப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தனர். அதன் பேரில் பொதுப்பணித்துறையினர், சேலம் செயற்பொறியாளர் ஆசம் பாஷா, உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சுவேத நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து, நேற்று முன்தினம் நேரில் ஆய்வு நடத்தினர்.

Tags : Swetha River ,Dhammampatti ,
× RELATED தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு சுவேத நதியில் ஆபத்து பயணம்