×

இடைப்பாடி புதன்சந்தையில் 102 டன் காய்கறிகள் ₹40 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, பிப்.20: இடைப்பாடி புதன்சந்தையில், 102 டன் காய்கறிகள் ₹40 லட்சத்திற்கு விற்பனையானது. இடைப்பாடியில் நேற்று நடந்த சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 102டன் காய்கறிகளை வியாபாரிகள் கொண்டு வந்தனர். இதில் 20கிலோ தக்காளி பெட்டி ₹150 முதல் ₹200க்கும், சின்ன வெங்காயம் கிலோ ₹22 முதல் ₹30க்கும், பெரிய வெங்காயம் ₹25 முதல் ₹30க்கும், பீட்ரூட் கிலோ ₹15 முதல் ₹20க்கும், கேரட் ₹30 முதல் ₹40க்கும், பீன்ஸ் ₹30முதல் ₹35க்கும், முள்ளங்கி ₹10 முதல் ₹15க்கும், உருளை கிழங்கு ₹20 முதல் ₹25க்கும், கத்தரிக்காய் ₹20 முதல் ₹30க்கும், மிளகாய் ₹15 முதல் ₹20க்கும், இஞ்சி ₹60 முதல் ₹70க்கும், சேவல் கோழி ₹1000, சேவல் ஒன்று ₹200 முதல் ₹900க்கும், கோழி ஒன்று ₹100முதல் ₹500 வரையும் விற்பனையானது. இதில் மொத்தம் ₹40 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது