×

வாழப்பாடியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

வாழப்பாடி, பிப்.20: வாழப்பாடி ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் முன்னால் ஏற்காடு எம்எல்ஏ தமிழ்செல்வன், கிழக்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ், ஆத்தூர் கருணாநிதி, ஜெய்சித்ரா ஜெயவேல், மதியழகன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், உமாபதி, கலைச்செல்வி மாது, திருமுருக வீரபாண்டியன், பழனிசாமி, தனபால், ராஜவேல், குறிச்சி பெரியசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், குமார், கருணாகரன், கமல்ராஜா, புழுதிக்குட்டை செயலாளர் கந்தசாமி, முத்தம்பட்டி கலைச்செல்வன், உறும்பி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். வாழப்பாடி ஒன்றிய அதிமுக துணை செயலாளராக பதவி வகித்த வந்த வழக்கறிஞர் நீலமேகம், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். மேலும், குறிச்சியை சேர்ந்த 6வது வார்டு அதிமுக உறுப்பினர் ஈஸ்வரன் உள்பட அதிமுக, பாமகவிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

Tags : DMK ,General Members Meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி