அடுத்தடுத்து திருவிழாக்கள் வருவதால் கடல் மீன் விலை கிலோவுக்கு ₹50 சரிவு

சேலம், பிப்.20: சேலம் வ.உ.சி., மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கேரளா, விசாகப்பட்டணம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விலா, சங்கரா, வெள்ளை கிழங்கா, வஞ்சிரம், பாவல், சாலமன், செப்புலி, கொடுவா, இறால் உள்பட பல வகை மீன்களும், மேட்டூரில் இருந்து ரோகு, கட்லா, கெழுத்தி  வகை மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் மீன்களை சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள மீன் வியாபாரிகள் சில்லரையில் வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். நடப்பு வாரம் நாளை (21ம் தேதி) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை 23ம் தேதி அமாவாசை வருகிறது. அடுத்தடுத்து திருவிழாக்கள் வருவதால் சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மீன் வகைகளின் விலையும் சரிந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு மீன்களும் கிலோவுக்கு ₹50 வரை சரிந்துள்ளது.

₹400க்கு விற்ற விளமீன் ₹350 எனவும், ₹ 20க்கு விற்ற சங்கரா மீன் ₹250 எனவும், ₹700க்கு விற்ற வஞ்சிரம் ₹650 எனவும், ₹650க்கு விற்ற பாவல் ₹600 எனவும், ரோகு, கட்லா, கெழுத்தி வகை மீன்கள் ₹160 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.  விலை குறைவு தற்காலிகம் தான். ரும் வாரத்தில் பழையபடி விற்க வாய்ப்புள்ளது என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: