×

அஞ்செட்டியில் எருதாட்டம் கோலாகலம்

தேன்கனிக்கோட்டை, பிப்.20: அஞ்செட்டியில் நேற்று நடைபெற்ற எருதாட்டத்தில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. இதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் நேற்று எருதாட்ட விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகளை கொம்புகளில், அலங்கரிக்கப்பட்ட தட்டிகளால் கொண்டு வரப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாடு பிடிவீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றனர். அப்போது, சீறிபாய்ந்து சென்ற ஒரு காளையின் கயிறு, மாடுபிடி வீரரின் காலில் சிக்கிகொண்டது. அப்போது சில அடி தூரம் வீரரை மாடு இழுத்து சென்றது. இதனை கவனித்த இளைஞர்கள் சிலர், காளையை பிடித்து இளைஞரை மாட்டின் பிடியில் இருந்து மீட்டனர்.  பின்னர் மாடு பிடி வீரர்கள் சில காளைகளை அடக்கினர். யாருக்கும் பிடிகொடுக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் எருதாட்டத்தை கண்டுகளித்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேன்கனிக்கோட்டை போலீசார் மேற்கொண்டனர்.



Tags : Anjetti ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...