×

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

தேன்கனிக்கோட்டை, பிப்.20: தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனையில், காசநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமை  தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து 50க்கும்  மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டனர். டாக்டர் செந்தில், நோயாளிகள் உட்கொள்ள  வேண்டிய ஊட்டசத்துகள் குறித்து ஆலோசனை வழங்கினார். காச நோயாளிகளுக்கு  பழங்கள், கடலை மிட்டாய் ஆகியவை அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.  மருத்துவர் அன்பரசு, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவபெருமாள்,  மாதேஷ்வரன், ஜெயராஜ், ஆய்வக மேற்பார்வையாளர் கார்த்தி, லதா,  வெங்கடராமன்  மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Tags : Tuberculosis Awareness Camp ,Thenkanikottai Government Hospital ,
× RELATED வல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்