×

கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும்

கிருஷ்ணகிரி, பிப்.20:கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, காவேரிப்பட்டணம் முன்னாள் எம்எல்ஏ.வான மேகநாதன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகள் தற்போது புதியதாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அணையில் சுமார் 85 சதவீதம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் கோடை காலம் ஆரம்ப நிலையில் உள்ளதால், அணையை தூர்வார சரியான நேரமாக அமைந்துள்ளது. மேலும், அணை கட்டிய காலத்தில் இருந்து இதுவரை தூர் வாரப்படாமல் மண், மணல், சேறு, சகதிகள் மற்றும் மண் திட்டுகள் ஆங்காங்கே காணப்படுகிறது.  கிருஷ்ணகிரி அணை ஆயக்கட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிருஷ்ணகிரி அணையை தூர்வாரி, முழு கொள்ளளவும் நீர் தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன அணையின் வலதுபுற, இடதுபுற கால்வாய்களை தூர் வாரி கான்கிரீட் கால்வாய்களாக மாற்றிட வேண்டும். தற்போது அதற்கான சூழ்நிலை உள்ளதால் போர்க்கால அடிப்படையில் பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையினை நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...