×

கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.20: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சைலேஷ்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார்.  இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பங்கேற்று பேசினார். கூட்டத்தில், வேளாண் பதப்படுத்தும் மண்டலம், காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது. வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட கிருஷ்ணகிரிக்கு வருகைத் தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனிவெங்கட்டப்பன், காத்தவராயன், கோவிந்தராஜ், தென்னரசு, மாணவர் அணி மாவட்ட செயலாளர் தங்கமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் நன்றி கூறினார்.

Tags : AIADMK ,Executives Advisory Meeting ,Krishnagiri ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...