×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.20: தர்மபுரியில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நேற்று போராட்டம் நடந்தது. முன்னெச்சரிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தர்மபுரி மாவட்ட ஜமாத்துல் சபை சார்பில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, நேற்று அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தர்மபுரி பாரதிபுரம் 60 அடி சாலையில் திரண்டனர். அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து, கலெக்டர் அலுவலகம் செல்லாதவாறு அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் செல்ல முயற்சி செய்தனர்.

பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 10 பேர் மட்டுமே, கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் பாரதிபுரத்தில் நிறுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் 650க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மவுலவி பஜல் கரீம் ஹஜ்ரத் தலைமை வகித்தார்.செயலாளர் மௌலவி ஹப்புல்லாஹ் ஹஜ்ரத், மனிதநேய மக்கள் கட்சி சாதிக்பாட்ஷா, ஜாவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா