×

மண்வள அட்டை தின விழிப்புணர்வு

காங்கயம், பிப்.20: மண்வள அட்டை தினத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே படியூரில் மண்வள அட்டை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மண்வள அட்டை தினம் பிப்ரவரி 19ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, வேளாண் துறை சார்பில் மண் வள அட்டை தினம் படியூரில் நடந்தது. இதில், திருப்பூர், வேளாண் இணை இயக்குநர் மனோகரன் கலந்து கொண்டு, மண் வள பாதுகாப்பு குறித்தும், மண் வளத்தை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது மண்ணின் வளத்தைக் கண்டறிந்து பயிர் செய்து மகசூலை அதிகரிக்கலாம் என கூறினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் கலந்து கொண்டு, மண்ணில் இடும் ரசாயன உரங்கள் மற்றும் களைக் கொல்லிகளால் மண்ணின் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் களைக் கொல்லிகளை அளவறிந்து, தேவைக்கேற்ப மட்டும் பயன்டுத்தி மண்ணின் வளத்தை பாதுகாக்குமாறு, கூறினார்.

பொங்கலூர், மண்ணியியல் துறை வேளாண் அறிவியல் நிலைய நிர்வாகி தனசேகர பாண்டியன், காங்கயம் வட்டார மண்ணின் தன்மை குறித்தும், இத்தகைய மண்ணின் வளத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு பயிர் செய்யலாம் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். இதில், காங்கயம் வேளாண் உதவி இயக்குநர் புனிதா, வேளாண் அலுவலர் பானுப்பிரியா, தோட்டக்கலை அலுவலர் சரண்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன், சிவக்குமார் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் சின்ராசு, அட்மா திட்ட அலுவலர்கள் வசந்தமுருகன், ஹரிப்பிரியா, படியூர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு